Friday, May 2, 2014

முனைவென்றி நா.சுரேஷ்குமார்


தலைமை தாங்கியது குழந்தை
மாலையும் கழுத்துமாய்
பொம்மைகள்

யாரும் தீண்டாதமொம்மை
சாபவிமோசனம் அடைகிறது
குழந்தையின் கண்பட்டு

புத்தகத்தை புரட்டினேன்
எங்கோ கேட்கிறது
மரங்கொத்தியின் சத்தம்

கோட்டத்துவங்கியது மழை
கவலையில் குழந்தை
கரையும் மணல்வீடு

துள்ளிக்குதித்தோடின
குட்டிகுட்டி நிலாக்கள்
மழலையர்பள்ளி மணியோசை.


No comments:

Post a Comment